Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச)
இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு(ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெறும்.
நடப்பாண்டுக்கான 2ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடக்கிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அக்டோபர் 8ல் தொடங்கி நவம்பர் 7ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஹால்டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
இவற்றை /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி மூலமாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b