Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 29 டிசம்பர் (ஹி.ச.)
நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது.
இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாராகி உள்ளது. வரும் 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இது தொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில்,
உத்தர பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்கள் இடம் பெறுகிறார்கள், 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 1 கோடிக்கு அதிகமானோர் தேர்தல் ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட 12 ஆவணங்களைக் காட்டி பெயர் சேர்க்க முறையிட தகுதியானவர்கள்.
ஜனவரி 1 முதல் அவர்கள் இது குறித்து முறையிட படிவம் 6-ஐ பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
என தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM