சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்
ஈரோடு, 29 டிசம்பர் (ஹி.ச.) இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். புலிகளின் நடமாட்டம் அறியப்பட்ட பகுதிகளில் தானியங்கி புகைப்பட கருவிகள் பொருத்தப்பட்டு புலிகள் நடமாட்டத்தை கேமிரா மூலம் பதிவு செய்தே புலிகளின்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்


ஈரோடு, 29 டிசம்பர் (ஹி.ச.)

இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். புலிகளின் நடமாட்டம் அறியப்பட்ட பகுதிகளில் தானியங்கி புகைப்பட கருவிகள் பொருத்தப்பட்டு புலிகள் நடமாட்டத்தை கேமிரா மூலம் பதிவு செய்தே புலிகளின் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது இயற்கையின் அதிசயம். இதன் அடிப்படையில்தான் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்தியாவில் 17 மாநிலங்களில் புலிகள் இருக்கின்றன. புலிகளை கால் தடங்கள் வைத்து கணக்கிடும் முறை ஆரம்பத்தில் இருந்தது. அப்போது ஒரு புலியின் தடத்தையே வெவ்வேறு இடங்களில் கணக்கெடுத்து விட வாய்ப்பிருந்தது. புலிகளின் கால் தடங்கள் மணல் வெளியில் ஒரு மாதிரியாகவும்,களிமண் பகுதியில் வேறு மாதிரியாகவும் பதியும், அதனால் கணக்கெடுப்பில் பிழை நேர்ந்தது. அதனால் கேமரா டிராபிங்ஸ் முலம் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.

இந்த கணக்கெடுப்பு, வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் நிலையை மதிப்பிட உதவுகிறது.

தமிழகத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் யானைகள் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளின் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் இன்று(டிசம்பர் 29) முதல் 5 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, பவானிசாகர், கடம்பூர், ஜீர்ஹள்ளி, விளாமுண்டி உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது.

மாமிச உண்ணிகள், கால் தடம், சாணம், நேர்கோட்டுப்பாதை ஆகியவற்றின் மூலம் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம் 75 குழுக்களாக பிரிந்து 300 வனத்துறை ஊழியர்கள் 5 நாட்கள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b