Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 3 டிசம்பர் (ஹி.ச.)
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் பாந்திராவை சேர்ந்த முசாகித் இஸ்மாயில் மோமினின் (வயது27) உடமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது டிராலி பேக்கில் துணிகளுக்கு இடையே மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்பிலான 941 கிராம் உயர்ரக கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கமிஷனுக்காக கஞ்சாவை கடத்தி வந்ததாக வாலிபர் வாக்குமூலம் அளித்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM