Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் பெய்து வரக்கூடிய கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 4000 கோடி என்னாச்சு என விமர்சித்து அதிமுக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த 4000 கோடிக்கு,
வீட்டுக்கு ஒரு மோட்டார் கொடுத்திருந்தா,
நமக்கு நாமே திட்டம் போல,
மக்களே பம்ப் பண்ணிருப்பாங்களே?
ஆனா, அதுல கமிஷன் மாடல் அரசுக்கு லாபம் குறைவாக இருந்திருக்குமோ என்னமோ?
சில சாலைகளில் பம்ப் வைத்து நீர் எடுத்துவிட்டு, போட்டோக்களை சில ஊடகங்கள் வாயிலாக பிரசுரித்து, தண்ணியே இல்ல என்று உருட்டும் உ.பி.க்கள், ஒரு தெரு தள்ளி உள்ளே சென்றால், தத்தளிக்கும் தலைநகரை, மக்களைப் பார்க்கலாம்
வடியா ஆட்சிக்கு விடியல் என்ற விளம்பரம் ஒன்று தான் கேடா? என அதிமுக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ