தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியில்லாமல் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஏன்? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச) தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியில்லாமல் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டு வாரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், பொதுப்ப
High


சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச)

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியில்லாமல் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இரண்டு வாரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர்,

பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டு தாக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எந்த வித அனுமதியும் அனுமதியும் பெறாமல் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு வருவதை எதிர்த்து அப்பகுதி கவுன்சிலர் வாசுதேவன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாக பயன்படுத்தும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ