Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)
கோவையில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை இணைத்து கற்று கொள்ளும் வகையில்,புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயிற்சி மையம் குரும்ப பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டது.
இதற்கான துவக்க விழா கல்லூரி தலைவர் சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் டீன் ராஜேந்திரன்,இயக்குனர் ஜோசப் தனிக்கல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ரோபோட்டிக் மற்றும் நுட்பவியல் துறையில் இளம் மாணவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை தயார் செய்து வரும் கோவையை சேர்ந்த ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் பழனிசாமி பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தற்போது மேலைநாடுகளை போல கல்லூரி நிறுவனங்களுடன் தொழில் துறையினர் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வது புதிய கண்டுபிடிப்புகளை எளிதில் கண்டறிய உதவி புரிவதாக தெரிவித்தார்.
தற்போது இந்திய மாணவர்கள் ஆராய்ச்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர்,இனி வரும் காலங்களில் தொழில் நுட்ப அறிவியலில் இந்தியா மற்ற நாடுகளின் துணையின்றி சுயசார்பு நாடாக வேகமாக மாறி வருவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரி ஏ.ஐ.டி.மற்றும் கோட் ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மாணவர்கள் கல்வி கற்கும் போதே தொழில் நுட்பங்கள் சார்ந்த திறன்களை மாணவர்கள் வளர்த்தி கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என கல்லூரி இயக்குனர் ஜோசப் தனிக்கல்,டீன் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில்,கோட் ரோபாட்டிக்ஸ் இணை நிறுவனர்களான முகேஷ் மற்றும் முத்து மற்றும் ஆதித்யா நிறுவனங்களின் அறங்காவலர் பிரவீன் குமார், இயந்திர பொறியியல் துறை தலைவர் செல்வ குமார், முதல்வர் ஞானசெல்வ குமார், வீரபத்திரன், மாதேஸ்வரி உதயசந்திரன் உட்பட பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan