Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)
கோவை பாலக்காடு சாலை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, எட்டிமடை சிறப்பு சோதனை சாவடியில், போலிசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது.
அவ்வழியாக வந்த TN66 AV 2030 என்ற ATHER இருசக்கர வாகனத்தை போலிசார் தடுத்து சோதனை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழ் உள்ள அறையில் மறைத்து வைத்திருந்த சுமார் 30 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
மேலும் விசாரணையில்Surya groups என்ற கம்பெனியில் இருந்து KMS engineering என்ற நிறுவனத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாகவவும் Building material வாங்கியதற்க்கு கொடுக்க வேண்டிய பணம் என விசாரணையில் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அதற்கான எந்தவிதமான ஆவனங்களும் அவரிடம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பணம் கொண்டு வந்த கேரளா மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை வருமான வரிதுறை அதிகாரிகள் வசம் க.க சாவடி காவல் நிலைய போலிசார் ஒப்படைத்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan