Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 3 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு அன்னை சத்யா நகரில் சாய்சரண் என்ற 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு அவரது தாய் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட கொடுத்து உள்ளார்.
அதனை சாய் சரண் சாப்பிட்ட போது உணவுக் குழாய் வழியாக செல்லாமல் மூச்சுக்குழாய் வழியாக பழம் சென்று உள்ளது. மூச்சுக்குழாயில் சிக்கியதால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனையில் சிறுவனின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழம் எடுக்கப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN