அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி திமுகவில் இணைந்தார்
சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.) ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சின்னசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது ஐஎன்டியுசி-யில் பிளவு ஏற்பட்ட நிலையில் தனது அணியினருடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர். அப்போது
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி திமுகவில் இணைந்தார்


சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)

ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சின்னசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது ஐஎன்டியுசி-யில் பிளவு ஏற்பட்ட நிலையில் தனது அணியினருடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர்.

அப்போது இரட்டை இலை சின்னத்தில் நின்று சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று சின்னச்சாமி எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அதன் பின்னர் அதிமுகவில் அவர் இணைந்தார்.மீண்டும் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016 ஆம் நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக்கிடம் தோல்வியை தழுவினார்.

சின்னசாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கோவையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

டிடிவி தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பதவி வகித்து வந்த சின்னச்சாமி கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தவர் சில மாதங்களில் மீண்டும் அதிமுகவில் இணைந்து, அக்கட்சியில் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று

(டிச 03) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற சின்னசாமி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b