Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார்.
அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் த.வெ.க. மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் மக்களுக்கு கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றிருந்தது.
அதில் த.வெ.க. கொள்கை தலைவர்கள் புகைப்படமும், புஸ்சி ஆனந்தின் புகைப்படமும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகமும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் புகைபடமும் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இந்த கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / vidya.b