Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூரில் உதய நாள் எனும் தலைப்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது .
சூலூர் அண்ணா சீரணி கலையரங்கில் நடந்த இந்த பொதுக்கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்.
சூலூர் நகரச் செயலாளர் கௌதமன் வரவேற்புரை நிகழ்த்தினார். சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் துணைத்தலைவர் சோலை.ப. கணேஷ் பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கல்வியாளர் அணி தலைவர் செந்தலை. நா. கௌதமன் சிறப்புரை ஆற்றினார் .இந்த பொதுக்கூட்டத்தில் நீதிக்கட்சி டூ திராவிட மாடல் என்னும் நூல் வெளியிட்டு மாநில அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்;-
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற்று தரப்பட்டது. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அரசு பணிகளில் இருந்த நிலையை மாற்றி பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவருக்கும் அரசு வேலை பெற்றுக் கொடுத்ததும் திமுக ஆட்சிக் காலத்தில் தான் என பேசிய அவர் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுத்தும் இந்திய அளவில் முதன்மை மாநிலமாக விளங்கி வருவதற்கு நமது திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் தான் காரணம்.
தற்போதுள்ள சூழலில் திமுக 52 சதவீதம் வாக்குகளை பெற்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி.
7வது முறையாக திமுக வின் ஆட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் அமையும்.
கடந்த 2019 முதல் திமுகவிற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது 80 சதவீத பெண்களின் வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளது .வரும் தேர்தலிலும் இதே போன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
திமுக ஆட்சி குடும்ப ஆட்சி என விமர்சிப்பவர்களுக்கு வரலாறு தெரியாது. தலைவர் கலைஞர் தமிழ்நாட்டிற்காக போராடி சிறையில் இருந்த போதுதான் நமது முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தார்.
ஓயாத உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் திராவிட முன்னேற்ற கழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே போல் நமது இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த போதும் கலைஞர் சிறையில் தான் இருந்தார்.
இதுபோன்ற எண்ணற்ற தியாகங்களை செய்த தலைவர் கலைஞரின் முயற்சியால் இன்றும் திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து வருகிறது.
திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாகவே எஸ் ஐ ஆர் எனப்படும் சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியல் காலக்கெடு நீட்டிக்கப்பேசினார். இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி என பேசினார்
இந்த பொதுக் கூட்டத்தில் மாநில அமைப்புசாரா அணி செயலாளர் பணப்பட்டி தினகரன், கருமத்தம்பட்டி நகர செயலாளர் நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் ,பொதுக்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் ,மாவட்ட இலக்கிய அணி தலைவர் பட்டணம் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் அன்பரசு, சிபி.கே. செந்தில்குமார் ,பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி எஸ் செல்வராஜ், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், பசுமை நிழல் விஜயகுமார் மாணவர் அணி பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மேலும் ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பணி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் சாமிநாதன் நன்றி உரையாற்றினார்.
Hindusthan Samachar / V.srini Vasan