Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)
இ-பைலின் முறையில் குறைபாடுகளை சரி செய்யக்கோரி இன்று முதல் நான்கு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
இது குறித்து கோவை, வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்,
இ-பைலிங் குறைபாடுகள் வழக்கறிஞர் வெகுவாக வழக்கறிஞர்களை வெகுவாக பாதிக்கிறது.
அதை சரி செய்யும் வரை அனைத்து வழக்குகளுக்குமான கட்டாய இ-பைலின் முறையை அமல்படுத்தியதை திரும்பிப் பெற வேண்டும் என்றும், பொதுக்குழுவால் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் இன்று முதல் வருகிற 6 ம் தேதி வரை அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என்றும் காணொளி காட்சி மூலமாகவும் நீதிமன்றங்களில் ஆஜராவதில்லை என்றும் முடிவு செய்யப்படுகிறது.
மேலும் இ-பைலிங் மூலம் எந்த வழக்கு மனுக்களும் தாக்கல் செய்யப் போவதில்லை என்றும், ஒருமனதாக பொது குழுவில் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan