Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 3 டிசம்பர் (ஹி.ச.)
கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரா, அருணாசலேஸ்வரருக்கு அரோகரா”என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது.
பல ஆயிரக்கணக்கான கிலோ நெய், துணிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தீபம் மாலை 5.55 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதும், சரியாக 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கடும் மழையிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி, சாலையோரம், கோயில் மண்டபங்கள், வீடுகளின் மாடிகளில் நின்று தீபத்தை தரிசித்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நிமிடங்கள் தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் மலை உச்சியில் தெரிந்தது.
மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், மலை மீது பனி மூட்டம் விலகி, அர்த்தநாரீஸ்வரர் வடிவம் துல்லியமாகத் தெரிந்ததும் பக்தர்கள் “ஓம் அருணாசலா… சிவ சிவ” விண்ணை பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
கோயில் நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, தங்கும் விடுதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு, அது 11 நாட்கள் வரை எரியும்.
இந்த தீபத்தை தரிசித்தால் அனைத்து பாவங்களும் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஓம் நமசிவாய சிவ சிவ அண்ணாமலையாரே என பக்தர்கள் உருகி வேண்டிக்கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J