டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, 3 டிசம்பர் (ஹி.ச.) சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியும், நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா பெற்றவருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினம் இன்று(டிச 03) அனுஷ்டிக்கப்படுகிறது. டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்த
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி


புதுடெல்லி, 3 டிசம்பர் (ஹி.ச.)

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியும், நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா பெற்றவருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினம் இன்று(டிச 03) அனுஷ்டிக்கப்படுகிறது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (டிச 03) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர், அரசியலமைப்பு சபைக்குத் தலைமை தாங்கியது முதல் நமது முதல் ஜனாதிபதியாக பதவியேற்றது வரை, அவர் நம் நாட்டிற்கு ஒப்பிடமுடியாத கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் நோக்கத்தின் தெளிவுடன் சேவை செய்தார்.

பொது வாழ்க்கையில் அவரது எளிமை, தைரியம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான நீண்ட ஆண்டுகள் அர்ப்பணிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். அவரது முன்மாதிரியான சேவை மற்றும் தொலைநோக்கு தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b