உலக மாற்றுத் திறனாளிகள் தினம் - களியனுர் கிராமத்தில் அனுசரிப்பு!
காஞ்சிபுரம், 3 டிசம்பர் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் விவசாய சங்க செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி வார்டு உறுப்பினராக தங்கப்பாண்டியன் என
Physically Challenged Day


காஞ்சிபுரம், 3 டிசம்பர் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் விவசாய சங்க செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி வார்டு உறுப்பினராக தங்கப்பாண்டியன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளதுமாற்றுத்திறனாளிகள் குழு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்களை வீடு தேடி விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க கோரியும், இலவச பேருந்து அடையாள அட்டை மற்றும் ரயில் பயண அடையாள அட்டை வழங்க கோரியும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ அரிசி வழங்க கோரி மாற்றுத் திறன்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்

கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN