குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி
சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.) வங்க கடலில் உருவான, ''டித்வா'' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று (டிச 03) காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி


சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)

வங்க கடலில் உருவான, 'டித்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று

(டிச 03) காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில்

எண்ணுார் 146,

சேத்துப்பட்டு, திருவண்ணாமலை 130,

திருமயம் 120

தாமரைப்பாக்கம் 120

விம்கோ நகர் 117

மணலி புதுநகரம் 113

சத்யபாமா பல்கலை 110

திருக்கழுக்குன்றம் 110

மேடவாக்கம் 108

பள்ளிக்கரணை 103

கேளம்பாக்கம் 100

உளுந்துார்பேட்டை 99

அம்பத்துார் 92

துரைப்பாக்கம் 90

பெரம்பூர் 89

கண்ணகி நகர் 70

சோழிங்கநல்லுார் 68

கொரட்டூர் 68

அயனாவரம் 64

தொண்டையார்பேட்டை 58

கனமழையின் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் - செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள 27 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b