Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்களுக்கான முக்கிய துறையாக ஒப்பனை கலைஞர்களின் அழகியல் துறை மாறி வருகிறது.
இந்நிலையில் தனியார் மையத்தில் பயிற்சி முடித்த ஒப்பனை கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்றது.
இதில் பயிற்சி முடித்த பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக திருமண கோலத்தில் மணமகளுக்கு செய்யும் ஒப்பனைகளை நேரடியாக மேடையில் செய்து காட்டினர்.
அதன் பின்னர், ஒப்பனை செய்யப்பட்ட மணமகள் வேடமிட்ட பெண்கள் மேடையில் ராம்ப் வாக் நடந்து அசத்திய காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார உடைகளை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே மேடையில் ராம்ப் வாக் நடந்து காண்பித்து அனைவரையும் கவர்ந்தனர்.
தமிழகம் முதல் கேரளா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களின் பாரம்பரிய கலாச்சார திருமண உடைகளுடன் பெண்கள் மேடையில் தோன்றியது விழாவுக்கு வண்ணம் கூட்டியது.
Hindusthan Samachar / V.srini Vasan