Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 3 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
சந்தை மதிப்பின்படி, ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 90.11 ஆக உள்ளது.
இன்று காலை 10 மணி அளவில், ஒரு அமெரிக்க டாலர் ரூ. 90.11 ஆக இருந்தது. இந்த சரிவு முன் எப்போதும் இல்லாததது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்த்தகர்கள்,
இந்த வீழ்ச்சி ஆச்சரியமல்ல. ஆனால், சரிவின் வேகம் ஏமாற்றமளித்துள்ளது.
ரூபாய் சரிவு காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன.
குறிப்பாக, கச்சா எண்ணெய், மின்னணு மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் உயர்கின்றன.
வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் சுமை மேலும் கூடுகிறது.
இதனால், சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
Hindusthan Samachar / Durai.J