Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நடைபெற்று வருகின்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய அரையாண்டு விடுமுறை வருகிற ஜனவரி 4-ந் தேதியுடன் முடிவடைகிறது.
12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 5-ந் தேதி பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதாவது, ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை தொடங்குகிறது. 15-ந்தேதி பொங்கல், 16-ந்தேதி திருவள்ளுவர் தினம், 17-ந் தேதி சனிக்கிழமை உழவர் தினம், ஞாயிறு விடுமுறை தினம் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த விடுமுறை அனைத்து அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b