Enter your Email Address to subscribe to our newsletters

இந்தியா, 30 டிசம்பர் (ஹி.ச.)
ஜனவரி 1 -போபல் யூனியன் கார்ப்பரேட் தொழிற்சாலையில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு 377 டன் நச்சுக்கழிவுகள் அகற்றம்.
ஜனவரி 3 -காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட நாலு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
ஜனவரி 6 -சட்டசபையில் தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை என குற்றச்சாட்டு கூறி உரையை வாசிக்காமல் மூன்று நிமிடங்களில் வெளியேறினார் கவர்னர் ஆர் என் ரவி.
ஜனவரி 7-மதுரை மாவட்டத்தில் ஜங்ஷன் கனிம சுரங்கம் திட்டம் ரத்து.
ஜனவரி 9- துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் புதிய நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 10- தமிழகத்தில் பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவிற்கு ஜனவரி 23-ம் தேதி கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார்.
உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டங்கள் நடைமுறைக்கு வந்தது.
ஜனவரி 14 -ஒரே நாளில் மூன்று நவீன போர்க்க பல்கலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார்.
ஜனவரி 14, 15 ,16-ஆம் தேதிகளில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்தது.
அந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியானார்.
ஜனவரி 18 - திருவள்ளூர் தினத்தன்று காவி உடை அணிந்து வள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்தியது பரபரப்பானது.
ஜனவரி 10 - மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழங்கி தொடங்கி வைத்தார்.
ஜனவரி 15 - உத்திரபிரதேசத்தில் 44 நாட்கள் நடந்த மகா கும்பமேளா.
ஜனவரி 19 -நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஜனவரி 20- நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய கேரளா நிறுவனங்களுக்கு ஒரு கோடியே 12 லட்சம் அபராதம் விதித்தது கேரளா அரசு.
ஜனவரி 26 -டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்.
இந்தோனேசியா அதிபர் பிரேபாவோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராணுவ அணி வகுப்பை கண்டுகளித்தார்.
ஜனவரி 27- பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை மூன்று மாதத்திற்குள் அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஜனவரி 26- விழுப்புரத்தில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டப கட்டிடத்தை திறந்து வைத்தார்.
ஜனவரி 30 - வி.சி.க- வில் இருந்து விலகிய ஆதார் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைந்தார்.
பிப்ரவரி 1 மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தார்.
பிப்ரவரி 8 - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் வெற்றி பெற்றார்.
பிப்ரவரி 9 -மணிப்பூர் முதலமைச்சர் 51 சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிப்ரவரி 12- அதிமுக பொதுச் செயலாளர் பதவி இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என்று கூறி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு ஐகோட்டில் தள்ளுபடி ஆனது.
பிப்ரவரி 15- முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள்,1526 இயக்கர் நில ஆவணங்கள் உட்பட 2000 கோடி சொத்துக்களை கர்நாடக கோர்ட் தமிழக அரசிடம் ஒப்படைத்தது.
பிப்ரவரி 19- புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானஸ் குமார் பதவி ஏற்றார்.
பிப்ரவரி 24 -தமிழக முழுவதும் அமைக்கப்பட்ட 1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிப்ரவரி 25-அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீடு மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
பிப்ரவரி 27 -மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ6.626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மார்ச் 2-கச்சத்தீவு விவகாரத்தில் கவர்னர் ஆர் என் ரவி கூறிய சர்ச்சை -அதற்கு பதில் அளித்த தமிழக அரசு மத்திய அரசின் இயலாமை என்று தெரிவித்தது.
மார்ச் 10- நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் தமிழக எம்.பி -க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்ச் 17- தமிழக சட்டசபையில் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய கோரி அதிமுக கொண்டு வந்து தீர்மானம் தோல்வி அடைந்தது.
ஏப்ரல் 2- கச்சத்தீவு மீட்க மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சரின் மு க ஸ்டாலின் சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
ஏப்ரல் 4-பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார் -இதற்கிடையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனை இன்றி விடுவித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டது.
ஏப்ரல் 6- பாம்பன் புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஏப்ரல் 8 -காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்.
ஏப்ரல் 16- அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி இடையே நடந்த பேச்சு வார்த்தையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியானது.
ஏப்ரல் 11- சைவ,வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சில் சிக்கிய பொன்முடி - திமுக துணை பொது செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்.
ஏப்ரல் 12 - தமிழக பாஜக தலைவராக நையினார் நாகேந்திரன் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஜூன் 12- மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் கமல்ஹாசன்.
ஜூன் 17- கனடா நாட்டில் நடந்த ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஜூலை 19 -முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மரணம் அடைந்தார்.
ஜூலை 30- தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக நடிகை குஷ்பு நியமனம்.
ஆகஸ்ட் 14- பீகாரில் ராகுலுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரணி.
ஆகஸ்ட் 15-நாகலாந்து கவர்னர் இல.கணேசன், மரணமடைந்தார்.
செப்டம்பர் 3- இங்கிலாந்து சென்ற
மு.க .ஸ்டாலின் முன்னிலையில் வில்சன் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் மின்மாற்றி உற்பத்தி மையத்தை நிறுவ ரூ300 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
செப்டம்பர் 12-துணை ஜனாதிபதியானார் சி. பி ராதாகிருஷ்ணன்.
செப்டம்பர் 27-த.வெ.க தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி.
அக்டோபர் 9- ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியா,ஆஸ்திரேலியாஇடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அக்டோபர் 19 - தீபாவளி முன்னிட்டு அயோத்தியில் தீப உற்சவம், கோலாகலமாக நடைபெற்றது - இதில் இரண்டு கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
நவம்பர் 7- வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நவம்பர் 14-பீகாரில் மீண்டும் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி உருவானது.
நவம்பர் 25 -அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்தன -பிரதமர் மோடி காவி கொடியேற்றினார்.
நவம்பர் 26-அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க கட்சியில் இணைந்தார்.
நவம்பர் 30- ராஜ் பவனான கவர்னர் மாளிகை மக்கள் மாளிகை என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.
டிசம்பர் 14-பாரதிய ஜனதா தேசிய செயல் தலைவராக நிதி நபின் நியமனம்.
டிசம்பர் 13-கேரள தலைநகரை பாரதிய ஜனதா கைப்பற்றியது.
டிசம்பர் 19 -தமிழக வரவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
டிசம்பர் 23-எடப்பாடி பழனிச்சாமி பியூஸ் கோயில் சந்திப்பு.
டிசம்பர் 25-டெல்லி தேவாலயத்தில் நடந்த கிறிஸ்தும சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் மோடி 11 ஆண்டுகளில் முதன் முறையாக பங்கேற்றார்.
Hindusthan Samachar / Durai.J