Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
அண்ணாநகர் ஆயிஸ்டர் பல் பராமரிப்பு மையத்தில் பற்களை சீரமைக்க சென்றேன். கட்டணமாக 60,000 ரூபாய் செலுத்தினேன். சிகிச்சை அளித்த டாக்டர் சூசி கிறிஸ்டோபர் என்பவர், அகற்ற வேண்டிய பல்லுக்கு பதில் , மற்றொரு பல்லை அகற்றினார். அவரது தவறான சிகிச்சையால் எனக்கு கடும் வலி , ரத்தப் போக்கு மற்றும் நரம்பு பாதிக்கப்பட்டது.
எனவே மன உளைச்சலுக்கு 50 லட்சமும், உடல் சார்ந்த வலிக்கு 25 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் டி.ஆர். சிவகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
சிகிச்சை அளித்த டாக்டர் சூசி கிறிஸ்டோபர், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
இதற்கு அவர் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும் , வழக்கு செலவிற்காக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN