விபத்துக்களை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய 4 வாரங்களில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்
சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.) விபத்துக்களை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க கோரிய வழக்கில் 4 வாரங்களில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
Madras High Court


சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)

விபத்துக்களை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க கோரிய வழக்கில் 4 வாரங்களில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விபத்துக்களால் நடக்கும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் உரிய பாதுக்காப்பு விதிமுறைகளை அமல்படுத்த கோரி தேவதாஸ் காந்தி வில்சன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்படாமல் போலி வாகன பதிவு காரணமாக அதிகமான விபத்துகள் தமிழகத்தில் நடைப்பெறுகிறது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டின் அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ