Enter your Email Address to subscribe to our newsletters

சியோல், 30 டிசம்பர் (ஹி.ச.)
வடகொரியா – தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், அணு ஆயுதத் தாக்குதல் தடுப்பு முயற்சியாக நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் முன்னேற்றம் கண்ட சில நாட்களுக்குப் பிறகு, வடகொரியா இந்த சோதனையை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், இந்த ஏவுகணை சோதனை மிகுந்த திருப்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியாவின் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள்தெரிவித்துள்ளனர்
எதிர்காலத்தில் எதிரி நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது, பெரிய அணு ஆயுதங்களை வைத்திருப்பது தன்னிடம் அதிக பலத்தை அளிக்கும் என்று அதிபர் கிம் நம்புகிறார்.
இதன் காரணமாக, 2026 தொடக்கத்தில் வடகொரியாவில் நடைபெற உள்ள ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டிற்கு முன்பாக அணு ஆயுத சோதனைகளை முடுக்கிவிட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM