வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
புதுடெல்லி, 30 டிசம்பர் (ஹி.ச.) வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வங்கதேச முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்


புதுடெல்லி, 30 டிசம்பர் (ஹி.ச.)

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்கதேச முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் பிஎன்பி கட்சியின் தலைவருமான பேகம் கலீதா ஜியா காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கும், வங்கதேச மக்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் துயர இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு மன வலிமையை வழங்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்கதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா - வங்கதேச உறவுகளுக்கும் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும்.

2015-ஆம் ஆண்டு டாக்காவில் அவருடன் நடத்திய அன்பான சந்திப்பை நான் நினைவுகூர்கிறேன்.

அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மைக்குத் தொடர்ந்து வழிகாட்டும் என்று நம்புகிறோம்.

எனக்குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM