பாமக தலைவர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!
தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாமக சிறப்பு பொதுக்குழு டாக்டர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்த
தைலாபுரம் தோட்டம்


தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.)

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் பாமக சிறப்பு பொதுக்குழு டாக்டர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.

இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸின் பேரனும் ஸ்ரீ காந்தியின் மகனுமான சுகந்தன் அன்புமணிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பேசியிருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகந்தன் திண்டிவனம் வந்தால் முற்றுகையிடுவேன் என அன்புமணி ஆதரவாளரான ராஜேஷ் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் இல்லம் அருகே உள்ள டீக்கடையில் இரு தரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராஜேஷும் ராமதாஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் ராஜாராம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கடுமையாக வசைபாடி கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினரும் அங்கு மோதிக் கொள்ளும் சூழல் நீடிப்பதால் அப்பகுதியிலும் ராமதாஸ் இல்லத்திற்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் இரு தரப்பினும் அங்கிருந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தற்போது இரு தரப்பினரும் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam