2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.) தமிழக அரசு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளது. இந்த ஆண்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன்
பொங்கல் பரிசு


தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.)

தமிழக அரசு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளது.

இந்த ஆண்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் இதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam