100 நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்
போராட்டம்


சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஊரக

வளர்ச்சி துறை ஊழியர்கள் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை

கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பத்தாயிரம் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி விடுவிக்காததை கண்டித்தும் ஊராட்சி செயலர்களின் ஊதியத்தை ஊராட்சியில் செலவு

செய்து விட்டு பணியில் இருக்கும் ஊராட்சி செயலர்களின் துயரத்தை நீக்கி ஊராட்சி கணக்கு எண் 2 லிருந்து நிதி விடுவிக்க வேண்டும், பிரதம மந்திரி வீடு கட்டும்

திட்டத்திற்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்தை

கண்டித்தும், இடிந்து விழும் நிலையில் உள்ள வலங்கைமான் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

மேலும் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் தொடர்பாக கடந்த நான்கரை ஆண்டுகளில் தொடரப்பட்ட விஜிலன்ஸ் வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டு குறிப்பு ஆணைகளை ரத்து

செய்ய வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் பணி ஓய்வுக்கு முதல் நாள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு பணி ஓய்வு ஆணை

வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam