ஜனவரி 2 -இல் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்வது குறித்த பேச்சுவார்த்தை
சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச) ரேஷன் கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்வது குறித்த பேச்சுவார்த்தை வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும்
ரேசன்


சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச)

ரேஷன் கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்வது குறித்த பேச்சுவார்த்தை வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டினர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பான பேச்சு வார்த்தை தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் வரும் 2-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் பதிவாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள் புதிய ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை வழங்கலாம் எனவும் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது

விநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்குவது, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊதியம் மறுபரிசீலனை செய்ய கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ