Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)
மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரியில் எம்.எஸ்.சி மைக்ரோ பயாலஜி படித்த ஆபிரகாம் நித்திய பாண்டியன்.
இவர் பழம் பெரும் பின்னணிப் பாடகி பத்மினி பாண்டியன் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார்.
பிரெஞ்சு நாடகம் நடத்தி வரும் இவரது தந்தை ஜவஹர்லாலிடம் நடிப்பு பயிற்சி பெற்று குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார்.
இவரிடமும் இசைப் பயிற்சியை கற்று தேர்ந்து உள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள
ஏ.கே.டி கலை மன்றத்தில் நடிகராகவும் இசைக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
தன்னுடைய 7-வயதில் பின்னணி பாடகராகி இருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்கான பாடல்களை பாடி
நார்வேவில் வெளியிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் இசைப் போட்டிகளில் பங்கு பெற்று வென்றிருக்கிறார்.
இசை தான் முக்கியம் ,
இசை தான் என் உயிர் மூச்சு என்ற கொள்கையோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனசுலாயோ...ராசாத்தி ஒன்ன... அன்பென்னும் மழையிலே ... வெண்மதி வெண்மதி... பொன்மகள் வந்தால்... நெஞ்சுக்குள்ளே... விழியிலே பனி விழியிலே .... ஆராரிராரோ... ஆராமலே போன்ற திரைப்பட பாடல்களை பாடி உலக தமிழ் ரசிகர்களிடம் இடம் பெற்றிருக்கிறார்,என்பது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / Durai.J