வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் தமிழிசை சௌந்தர்ராஜன் சுவாமி தரிசனம்
சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் தமிழிசை சௌந்தர்ராஜன் சுவாமி தரிசனம் செய்தார். தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக நிர்வாகிகளுடன் சென்று வழிபாடு நடத்த இருந்த நிலையில் , கோவிலில்
Tamilisai


சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் தமிழிசை சௌந்தர்ராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக நிர்வாகிகளுடன் சென்று வழிபாடு நடத்த இருந்த நிலையில் , கோவிலில் வைகுண்ட ஏகாதசி பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழிசையுடன் வந்த பாஜக நிர்வாகிகளிடம் அதிக எண்ணிக்கையிலானோர் கோவிலின் உள்ளே செல்ல வேண்டாம் , தமிழிசையோடு ஒன்றிரண்டு முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே செல்லுங்கள் என்றார். பின்னர் தமிழிசை பாஜக மாவட்ட தலைவர்கள் சிலருடன் மட்டும் கோவிலினுள் சென்று வழிபாடு நடத்தினார்..

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்தார்,

ஏகாதேசி திருநாள் மற்றும் வருகின்ற புத்தாண்டு அனைவருக்கும் நல்ல நாளாக அமைய வேண்டும் தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் போராடுகிறார்கள் போராட்டம் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும்,

நான் கோவிலுக்குள் செல்லும் பொழுது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கொஞ்சம் கோபம் உற்றார் நான் ஐந்து பேருடன் தான் கோவிலுக்கு சென்றேன். அவர் 50 பேர் என்று கூறிவிட்டார் . திமுகவினர் கோவிலுக்கு தனியாக செல்வார்கள் கூட்டமாக சென்றால் முதலமைச்சர் கோபித்துக் கொள்வார்.

உள்ளே சென்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரை நான் சந்தித்தபோது ஏற்பாடுகள் நன்றாக இருப்பதாக கூறினேன்.

திருப்பரங்குன்றம் இந்துக்களுக்கு பாராபட்சமாக இந்த அரசு நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுவதாகவும் , தந்தூரி விழாவுக்கு கொடியேற்று அனைவரையும் அனுமதித்தார்கள் , ஆனால் விளக்கேற்ற அனுமதிக்க வில்லை என்பது தவறு என நீதிபதியே கூறியுள்ளார் விளக்கேற்றும் காலம் வரும், இந்துக்களை தமிழ்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார் முதலமைச்சர்.

இந்த தேசத்தில் உள்ள பெண்கள் எல்லாம் முன்னேறி உள்ளார்கள் அதற்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான். 50 லட்சம் ஜன்தன் வங்கி பெண்களுக்கு துவங்கப்பட்டதால் தான் இவர்கள் இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட நேரடியாக வங்கி கணக்கில் செல்கிறது. 23 ஆயிரம் கோடி அல்லது தமிழ்நாட்டில் மட்டும் முத்ரா கடன் அளிக்கப்பட்ட இருப்பதாகவும் இதில் 63 ஆயிரம் பேர் பெண்கள் தான் நாடு முழுவதும் பத்து கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது தொழில் முனைவோராக பெண்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது 12 லட்சம் வரிக்குறைப்பு நடவடிக்கை மூலம் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், முதலமைச்சர் எந்த மேடையில் பேசினாலும் எங்களை பாசிச அரசு என்று கூறுகிறார், என்னை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளிப்பதாக குறிப்பாக அதற்கு உதாரணம் குடியரசு தலைவர் , 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா பாஜக ஆட்சியில் தான் தெரிவிச்ச பட்டது எங்கள் கட்சியில் 33 இட் சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்படுகிறது , ராணுவ அமைச்சர் நிதி அமைச்சர் ஆளுநர் உட்பட பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் , நேற்று மாநாட்டில் முழுவதுமாக தெரியாமல் பேச வேண்டாம்.

தூய்மை பணியாளர்கள் போராடுவது மன வருத்தத்தை அளிப்பதாகும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தூய்மை பணியாளர் போராட்டத்தை சர்வ சாதாரணமாக பேசுவதும் அதனை அரசுக்கு ஆதரவாக பேசுவதும் , சுகாதாரத்துறை அமைச்சர் தூய்மை பணியாளர்களை இடைத்தரக தூண்டி விடுவதாக கூறுவதும் ஏற்புடையது இல்லை.

தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் இல்லை என்று மா. சுப்பிரமணியன் கூறுகிறார் , திருத்தணி ரயிலில் போதையில் இளைஞர்கள் வடமாநில பயணியை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது முதலில் போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் பிறகு இல்லை என்று கூறுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ