எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை, எல்லை தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்த
மீனவர்கள்


தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.)

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை, எல்லை தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் சென்ற மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த மீனவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து மீன்வளத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக அந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam