Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.)
ரயிலில் வடமாநிலங்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளதாவது:
அதில் தெரிவித்துள்ளதாவது,
திருத்தணியில் இளைஞர் ஒருவர் சில நபர்களால் தாக்கப்பட்டதில், 4 இளஞ்சிறார்கள் Reels நோக்கத்திற்காக குற்றத்தை செய்துள்ளனர்.
அதில் மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒருவருக்கு இளையர் நீதிக்குழுவால் ஜாமீன் கிடைத்திருக்கிறது.
இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீது தாக்குதல் ஏதும் சமீபத்தில் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாக வாழத் தகுந்த சூழல் நிலவுகிறது.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில்கொண்டு, இவ்வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam