Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 30 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு திருப்படி திருவிழாவும் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவர் முருகப்பெருமானை தரிசிப்பர். நடப்பாண்டிற்கான திருப்படி விழா நாளை
டிசம்பர் 31-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தரிசனமும் நடைபெறவுள்ளது.
விழாவில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்று டிசம்பர் 30 முதல் வியாழக்கிழமை ஜனவரி 1, வரை 3 நாட்கள் மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பேருந்துகளில் பயணம் செய்யலாம்.
இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b