Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)
போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாநகர் போக்குவரத்து கழகத்தில் 15,300-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதியின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் / பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2026ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வரும்பொழுது, ஓய்வூதிய உத்தரவு ஆணை எடுத்து வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
அதன்படி, தலைமை நிதி அலுவலர், தலைமையகம் , மாதவரம் பணிமனை, கோயம்பேடு பணிமனை, செம்மஞ்சேரி பணிமனை, பட்டுலாஸ்சாலை தொழிற்கூடம், மண்டல தொழிற்கூடம், கே.கே.நகர் பணிமனை, குரோம்பேட்டை-1 பணிமனை, அண்ணாநகர் கிழக்கு பணிமனை, மாதவரம் பணிமனை, அடையார் பணிமனை, கிளாம்பாக்கம் பணிமனை ஆகிய இடங்களில் ஆயூட் கால சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
மேலும், விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-2345 5801-Extn.271 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள், தங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில், TNS-103 என்னும் இணையதள முகப்பில், தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், ஓய்வூதிய உத்தரவு ஆணை, வங்கி புத்தகம் மற்றும் கைபேசி எண் பதிவு செய்யலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b