Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 30 டிசம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (32). ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (30) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
திடீரென கடந்த 23ம் தேதி மதியம் முதல் சுமதியை திடீரென காணவில்லை. அன்று மாலையில் இருந்து சுமதியை தேடிய கணவர் மற்றும் உறவினர்கள் இரண்டு நாள் தேடியும் கிடைக்காததால் கடந்த 25ம் தேதி அன்று ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இளம் பெண்ணை காணவில்லை என வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க அன்று மாலையே அதே பகுதியில் உள்ள கோவிந்தன் அவர்களது மளிகை கடையில் வெங்கடேஷ் கொடுக்க சொன்னதாக ஒரு பரிசு பார்சல் சண்முகத்திடம் வழங்கப்பட்டது.
உடனடியாக அந்த பாக்ஸை பிரித்துப் பார்த்த சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். அதில் தனது காதல் மனைவியின் தாலி இருக்க சண்முகத்தின் சந்தேகம் வெங்கடேஷ் மீது திரும்பியது.
மேலும் இதுகுறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு சண்முகம் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஏற்காடு போலீசார் வெங்கடேஷிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் விரக்தியில் இருந்த சுமதிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தன் மகன் வெங்கடேஷ் (22) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அவ்வப்போது தனிமையாக சந்தித்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி அன்று வெங்கடேஷ் மற்றும் சுமதி ஆகிய இருவரும் காட்டுப் பகுதியில் தனிமையில் இருந்தபோது வேறொரு எண்ணில் இருந்து சுமதிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
புதிய எண்ணாக இருந்ததால் யார் அழைப்பது என்று வெங்கடேஷ் சுமதியிடம் கேட்டுள்ளார். முன்னுக்கு பின் முரணாக சுமதி பதில் கூறியதை தொடர்ந்து ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சுமதி அணிந்து இருந்த துப்பட்டாவினால் சுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் ஆத்திரம் குறையாத வெங்கடேஷ் சுமதி சாக்கு முட்டையில் கட்டி ஏற்காடு குப்பனூர் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே உள்ள சுமார் 600 அடி பள்ளத்தில் வீசியதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து வெங்கடேஷ் குறிப்பிட்ட இடத்தில் ஏற்காடு போலீசார் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் இறங்கினர்.
மிகவும் பள்ளத்தாக்கான பகுதி என்பதால் கயிறு கட்டி இறங்கியவர்கள் சுமார் 600 அடி பள்ளத்தில் சாக்கு முட்டையை கண்டுபிடித்தனர்.
மேலும் சாக்கு முட்டையில் இருந்த சுமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN