சென்னையில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச) சென்னை மாவட்டம் அடையாறு மண்டலத்தில் வார்டு-174க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்ட கட்டப்பட்டுள்ள 3 பல்நோக்கு மையக் கட்டித்தினையும், உடற் பயிற்சிக் கூடத்தையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் து
சென்னையில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்


சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச)

சென்னை மாவட்டம் அடையாறு மண்டலத்தில் வார்டு-174க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்ட கட்டப்பட்டுள்ள 3 பல்நோக்கு மையக் கட்டித்தினையும்,

உடற் பயிற்சிக் கூடத்தையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (30.12.2025) திறந்து வைத்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-174-க்கு உட்பட்ட வசந்தா பிரஸ் சாலையில், 174-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 9.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டிடம் மற்றும் பெசன்ட் நகர், 5-வது அவென்யூவில் மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையம் கட்டிடத்தினையும் திறந்து வைத்து இக்கட்டிடங்களில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட அடையாறு-2, நியாய விலைக் கடை மற்றும் பெசன்ட் நகர் 4-வது கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அவர் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானாவின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் வார்டு-174, பெசன்ட் நகர், 6-வது அவன்யூவில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு, உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர், சாஸ்திரி நகர் 4-வது சந்தில் 174-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூபாய் 10.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம் திறந்து வைத்து.

இக்கட்டடத்தில் செயல்படும் சாஸ்திரி நகர் 2-வது நியாய விலைக்கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 275/- என குறைந்த விலையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு மற்றும் நெய் அடங்கிய பொங்கல் தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்

Hindusthan Samachar / vidya.b