Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 30 டிசம்பர் (ஹி.ச.)
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பாணை செய்யும் பணி மும்முரமடைந்துள்ளது. திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கோடிக்காவலில் மண்பாண்டம் செய்யும் தொழிலை 10க்கும் மேற்பட்டோர் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,
பரபரம்பரையாக இத்தொழிலை செய்து வருகிறோம் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் சில்வர் பித்தளை போன்றவற்றை பயன்படுத்தி பொங்கலிட்டு விழாவினை கொண்டாடி வந்தனர்.
தற்போது இயற்கை மற்றும் மண்பாணைகளின் தன்மை மற்றும் குணங்களை அறிந்து மீண்டும் மண்பாணையில் சமைத்து பொங்கலிட்டு பொங்களை கொண்டாட முன்வந்துள்ளனர்.
இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நலிவுற்ற நிலையில் இருந்ததால் இத்தொழிலை செய்த பலர் வேறுதொழிலுக்கு சென்றுவிட்டனர். பரபம்பரை பரம்பரையாக நாங்கள் இத்தொழிலை தொடர்ந்துவருகிறோம்.
மண்பாண்டங்களின் அவசியத்தையும் அருமையை அறிந்து மீண்டும் மக்கள் வரவேற்றுள்ளனர். ஆண்டுக்கு பொங்கல்பாணை மற்றும் கார்த்திகை அகல்விளக்கு மட்டுமே விற்பனைசெய்கிறோம்.
இத்தொழிலினை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சிறுகடன் வசதிகள் செய்துதரவேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதத்தில் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்.
மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண் போதுமான அளவு கிடைக்கவில்லை. குறிப்பாக மண் எடுப்பதற்கான உரிமையை தமிழக அரசு காலம் தாழ்த்தி தான் தற்போது வழங்கியுள்ளது. இதனால் போதுமான அளவு மண் பானை செய்ய முடியவில்லை.
இனி வரும் காலங்களில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மண்பானை மற்றும் மண்பாண்ட தொழில்கள் செய்ய ஏதுவாக மண் எடுப்பதற்கான உரிமையை முன்கூட்டியே வழங்க வேண்டும்.
தற்போது மண்பாண்டங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பினை பெற்றுள்ளது. முற்றிலும் களிமண்ணால் பாணையினை அழகுறச்செய்து பின்னர் காயவைத்து சூலையில்சுட்டு பின்னர் விற்பனையாகிறது இதனை உற்பத்தி செய்ய குறைந்தது 2 நாட்கள் ஆகும்.
தற்போது உள்ள நிலையில் மண்பானைகள் ரூ.100 முதல் விற்பனையாகிறது. மண் சட்டிகள் ரூ.90 முதல் விற்பனையாகிறது. அளவுக்கு ஏற்றார் போல் மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b