Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
ரஜினி, கமல், விஜய்,அஜீத், சூர்யா,சிவகார்த்திகேயன், கார்த்தி,விஜய் சேதுபதி,தனுஷ், சிம்பு, பிரதீப் ரங்கநாதன் இவர்கள் படங்கள் தான் தயாரிப்பில் இருக்கும் போது விலை பேசப்பட்டு முன் தொகை தரப்படுகிறது.
விக்ரம், ரவி மோகன்
(ஜெயம் ரவி ), விஷால், விஷ்ணு விஷால்,ஆர்யா,ஜீவா, அருண் விஜய்,சித்தார்த்,விஜய் ஆண்டனி, அருள் நிதி,சந்தானம், GV பிரகாஷ்,பார்த்திபன்,சேரன்,மாதவன்,SJ. சூர்யா, சசி,சமுத்திரக்கனி,பிரபு தேவா,யோகி பாபு,அர்ஜுன்,விக்ரம் பிரபு,அதர்வா,விமல், ஹரிஷ் கல்யாண்,விமல்,மணிகண்டன்,பரத்,ஜெய், மிரச்சி சிவா,'ஹிப் பாப் ' ஆதி,சிபி சத்யராஜ்,வெற்றி,அசோக் செல்வன், ஸ்ரீகாந்த், கலையரசன்,துருவ் விக்ரம்,கௌதம் கார்த்தி,உதயா, விக்னேஷ்,விதார்த்,கதிர்,புகழ்,நிதின் சத்யா, போன்றோர் படங்கள் படம் பார்த்த பின் நன்றாக இருந்தால் வியாபாரம் ஆகிறது.
இல்லையேல் தயாரித்த நிறுவனமே வெளியிடவும் செய்கிறது. படம் HIT ஆனால் நல்ல வியாபாரம். இல்லையேல் ஒரு சில படங்களுக்கு மட்டும் OTT வியாபாரம் நடக்கிறது.
சுந்தர். சி மற்றும் ராகவா லாரான்ஸ் ஆகியோர் படம் நடிச்சி அவங்களே இயக்குற பேய் படத்துக்கு சூப்பர் பிசினஸ் நடக்கிறது.
மணி ரத்னம், ஷங்கர், முருகதாஸ்,லிங்குசாமி,AL. விஜய்,எழில், பசங்க பாண்டியராஜ்,அட்லி,
வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மிஷ்கின்,ஈரம் அறிவழகன்,கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ்,நெல்சன்,H. வினோத்,சுதா கொங்காரா, வெங்கட் பிரபு,ஆஜே. பாலாஜி,சிபி சக்ரவர்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன், தமிழ், மற்றும் 2024 & 2025ல் HIT கொடுத்த இயக்குனர்களுக்கு அவர்களுடைய கதாநாயகன், தயாரிப்பு மற்றும் முந்தைய படத்தின் வெற்றி ஆகியவற்றைப் பொறுத்து வியாபாரம் நடைபெறுகிறது.
பிரபு சாலமன், M. ராஜேஷ், பொன்.ராம், சுசீந்திரன்,விஷ்ணுவர்தன் போன்றோர் மறுபடியும் வெற்றி கொடுக்க முயற்சி செய்தபடி காத்திருக்கும் இயக்குனர்கள்
ஆகவே எந்த கதாநாயகன் இருந்தாலும், எந்த இயக்குனராக இருந்தாலும், எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் ரசிகர்களை ஈர்க்கும் கதை, திரைக்கதை,வசனம் அமைக்கப்பட்ட படங்களை மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன
ஒரு படத்தின் நாயகன் என்பது உண்மையிலேயே கதைதான். பிறகு தான் நடிகர்கள்.
தெலுங்கு சினிமாவில் 'தில்' ராஜ் எனும் பிரபல வெற்றி தயாரிப்பாளர் இருக்கிறார். உண்மையிலேயே அவர் தில்லானவர். ஒரு கதை கேட்டு அதை பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தை தயாரிப்பார். ஒரு கதை பிடித்து விட்டால்,அந்த கதை ஆசிரியருடன் மேலும் சில திரைக்கதை எழுத்தாளர்களை இணைத்து கதை சரியாக இருக்கிறதா? கதையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? மேற்கொண்டு அதை improvement செய்ய வேண்டுமா என்று அலசி ஆராய்ந்து, குறைகளை சரி செய்ய சொல்லுவார்.
நல்ல கதையை மிக நல்ல கதையாக மிக நேர்த்தியான கதையாக, வெற்றிகரமான கதையாக அதை மாற்றுவதற்கு தேவையான செலவை தயங்காமல் செய்வார்.
எழுத்தாளர் & திரைக்கதை ஆசிரியர்களைக் கொண்டு திருத்தம் செய்யப்பட்ட கதையை முழுமையாக கேட்டு, அது முழு திருப்தியாக இருந்தால் மட்டுமே கதாநாயகனுக்கு சொல்ல வைப்பார்.
பலரின் முயற்சியால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அந்த கதை கதாநாயகனை கட்டாயம் ஈர்க்கப்படுவதோடு, அதற்கான தேதியும் அவர் ஒதுக்குவார்.
படத்திற்கு தேவையான செலவை முறையாக பிரம்மாண்டமாக செலவிட்டு மிக நேர்த்தியாக வெளியிட்டு தொடர்ந்து வெற்றி கண்டு கொண்டிருக்கிறார்.
தமிழிலும் இது போன்று நம் தயாரிப்பாளர்கள் செய்து கொண்டிருந்த காலம் இருந்தது.
தயாரிப்பார் ஒரு நாயகனை வைத்து படம் எடுக்க முடிவெடுத்ததும், நாயகனுக்கு பொறுத்தமான கதை வேண்டும் என அறிவிப்பார்.
இயக்குனர்கள் மற்றும் இளம் இயக்குனர்கள் என சுமார் 30, 40 இயக்குனர்கள் கதை சொல்லுவார்கள்,அந்த கதைகளில் அந்த கதாநாயகனுக்கு ஏற்ற கதையாகவும்,தங்களுடைய பட்ஜெட்டுக்கு உகந்ததாகவும் இருக்கிற கதையை தேர்வு செய்து கதாநாயகனுக்கு கதை சொல்ல அனுப்புவார்கள், கதாநாயகனுக்கும் அந்த கதையைப் பிடித்திருந்தால் படம் ஒப்புக் கொள்வார்.
எந்த ஹீரோ முடிவானாலும் உடனே தேதி கிடைக்காது என்பதால், கதாநாயகன் தேதிக்காக காத்திருக்கும் நாட்களில் கூட தயாரிப்பாளர் அலுவலகத்தில் கதை விவாதம் தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே நன்றாக இருக்கிற கதை மிக நன்றாக நேர்த்தியாக மாறி வெற்றி வாய்ப்பை அது உறுதி செய்யும். அதனாலதான் அப்பொழுதைய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்கள், நூறு நாள் திரைப்படங்கள், 50 நாள் திரைப்படங்கள், ஓரிரு வார திரைப்படங்கள் என்ற வெற்றி பெற்றன. இப்பொழுது HIT இல்லையல் FLOP என்ற சூழல் மாறிவிட்டது.
இப்போதெல்லாம் வீட்டிலேயே டிவி நிகழ்ச்சிகள்,சீரியல்கள் மற்றும் ஓடிடியில் படம் பார்ப்பது என்றாகிவிட்டது , மேலும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கலாம் என்றால் தியேட்டர் கட்டணம், கேண்டீன் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, பார்க்கிங் கட்டண கொள்ளை, ஆன்லைன் டிக்கெட்டில் ஒவ்வொரு டிக்கெட் 30 ரூபாய் கமிஷன் பெறுவது போன்ற பல்வேறு சூழல்களால் மக்கள் தியேட்டர் வருவது குறைந்து போய்விட்டது.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தியேட்டரில் வந்து படம் பார்க்க ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி உள்ளது. அதனால் வருடத்திற்கு நான்கைந்து திரைப்படங்களோ, தனக்கு பிடித்த ஹீரோக்களுடைய படங்களை மட்டும் பார்ப்பது என்று தமிழ் சினிமா மாறிவிட்டது.
பொழுது போக்கிற்காய் படம் பார்ப்பது போய், வெற்றி பெற்ற படத்தை மட்டும் பார்ப்பது என்ற சூழல் உருவாகிவிட்டது. வருடத்திற்கு ஒருமுறை வரும் சர்க்கஸ், எக்ஸிபிஷன் போல மிகப்பெரிய ஹீரோவின் வெற்றி பெற்ற திரைப்படங்களை பார்ப்பது என மக்கள் வழக்கமாகி வருகிறார்கள். இந்த சூழலை உருவாக்கியது சினிமாக்காரர்களே தவிர வேறு யாரும் இல்லை
தமிழ் சினிமா, மற்ற மொழி சினிமாக்களை விட வியாபாரமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டது.
ஆகவே ஒரு சினிமா பிழைக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளர் பிழைக்க வேண்டும் என்றால், ஒரு இயக்குனர் வெற்றி பெற வேண்டும் என்றால், துறையைச் சார்ந்த அத்தனை பேருக்கும் லாபம் வர வேண்டும் என்றால்... இருக்கிற ஒரே வழி... மிக நேர்த்தியான சரியான வெற்றி பெறக்கூடிய கதை ஒன்றை தேர்வு செய்து சரியான திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவரால் மட்டுமே சாத்தியமாகும்.
ஆனால் ஒரு நல்ல கதையை, இயக்குனரான கதை ஆசிரியர் சரியாக செய்திருக்கிறாரா என்று தயாரிப்பாளர் சரி பார்ப்பதே இல்லை. கதைக்காக பல தயாரிப்பாளர் செலவு செய்வதே இல்லை. பல இளம் இயக்குனர்களும் தாங்கள் மிகப்பெரிய புத்திசாலி. மிக சரியாகவே கதையை செய்திருக்கிறோம் என்று எண்ணுகிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகிற 250 படங்களில் 200 படங்கள் தோற்றுப் போய்விடுகின்றன.
இளம் இயக்குனர்களுக்கு பல்வேறு விதமான தயக்கங்களும் சந்தேகங்களும் இருக்கின்றன, அதாவது கதை பேச வருபவர்கள் தன்னுடைய தயாரிப்பாளரை தட்டிப் பறித்துக் கொண்டு சென்று விடுவார்களோ, தன்னுடைய கதையை குறை கூறி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். தேவையற்ற பயம் இது.அனுபவத்துடன் கதை பேச வருபவர்கள் எப்போதும் இளம் இயக்குனர்களுக்கு உறுதுணையாகவே இருந்திருக்கிறார்கள்,
இருக்கிறார்கள்.
2010 வரை தயாரிப்பாளர்கள் தங்கள் நிறுவனத்தில் கதை இலாகா என்று, தங்கள் நிறுவனத்தில் கதை பேசுவதற்கு தனியே குழு ஒன்றை வைத்திருந்தார்கள்.புதிதாக படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள் முதலில் ஒரு அலுவலகம் அமைத்து , பல பேரிடம் கதை கேட்டு, சிறந்ததை படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வர வேண்டும். அழைத்தார்கள். நாமும் படம் எடுக்கலாம் என்று வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவது இயலாது.
இளம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தாங்கள் வெற்றி பெறுவதற்கு திரைத்துறையில் பல்வேறு அனுபவம் மிக்க இணை இயக்குனர்கள்,எழுத்தாளர்கள் ஆகியோரை கட்டாயம் கதை பேசுவதற்கு பயன்படுத்தியே ஆக வேண்டும்.
உங்களுடைய கதையை, அதன் குறையை பிறர் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை சொல்லுவதும், அதற்கேற்ற சரியான காட்சிகளை சொல்வதும் மிகப்பெரிய கொடுப்பினை. ஏனென்றால் அவர்கள் தான் உங்களுடைய படத்தின் வெற்றிக்கு சரியான அடித்தளத்தை அமைத்து தருகிறார்கள் என்பது தான் உண்மை.
படத்தின் பட்ஜெட் பெருசு, மார்க்கெட் இருக்கிற பெரிய ஹீரோவை வைத்து படம் படம் எடுப்பவர்களாக இருந்தால்,கதைக்காக பல லட்சங்கள் செலவு செய்யும் சூழல் இருந்தால்,ஒரு குழுவை மட்டும் பயன்படுத்தாமல், சில குழுக்களை பயன்படுத்திக் கூட கதையை சரி பார்க்கலாம்.முதல் குழு சொன்ன தவறை,திருத்தத்தை அடுத்தடுத்து வரும் மற்றவர்களும் சொல்லும்பொழுது, அந்த குறைகளில் நாம் கவனம் செலுத்துவது வெற்றியை உறுதிப்படுத்தும். நேர்த்தியான ஒரு குழுவே கூட மிக சரியான தீர்வையும் சொல்லிவிடுவதுமுண்டு.
கதையை பல்வேறு நபர்களிடம் குழுக்களிடம் பேசுவதால் கதை திருட்டு எல்லாம் போகாது, அவ்வளவு எளிதாக ஒரு திருட்டு கதையை சொல்லி உடனே படம் எடுத்துவிடும சூழல் தமிழ் சினிமாவில் இல்லை.
நம்மள மாதிரியே யோசிக்கிறவங்க பல பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் .நாம் படம் எடுக்க தாமதமாகும் போது, அதே மாதிரி கதையை அல்லது திரைக்கதையை அல்லது காட்சியை வேறொருவர் எடுத்து திரைப்படமாக வந்து விடுவது என்பது இயல்பான ஒன்றுதான்.
உங்களுடைய சொந்த அனுபவத்தை கதை எழுத தகுதியானது என்று உணர்ந்து கதை எழுதுறீங்களோ, அதே உணர்வு, அனுபவம் இன்னொருத்தருக்கும் கட்டாயம் வரும். அதனால தான் நாம யோசிச்ச டைட்டில், கதை, காட்சிகள் பல திரைப்படங்களில் வருவதை நாம பார்க்கிறோம்.
ஆகவே நம்பிக்கையா, மிக நேர்த்தியான அனுபவமுள்ள இணை, துணை இயக்குநர்கள் மற்றும் இயக்குனர்களை கதை பேச கூப்பிடுங்க. உங்க உள் வட்டத்தில் இருக்கிற உதவி உணர்வு மட்டுமல்லாமல், பாரபட்சம் இல்லாம கதையை காரணத்தோடு குறை செல்வதற்கும், சொன்ன குறையை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று கூறுவதற்கும், அதற்கு ஈடு கட்டும் வகையில் காட்சி சொல்வதற்கும் தகுதியுடைய வெளி ஆட்களையும் பயன்படுத்துங்கள்.
நமக்காக மத்தவங்க யோசிக்கிறது என்கிறது இயக்குனரான எழுத்தாளருக்கு ஒரு வரம்.
நம்ம படத்தை வெற்றி அடைய வச்சு, நமக்கு பேரும் புகழும் கிடைக்கறதுக்காகவும், நம்மள நம்புன தயாரிப்பாளருக்கு சம்பாரிச்சு கொடுக்கிறதுக்காகவும், குறைந்த செலவில் பல பேரு தங்களுடைய மூளைய செலவழிக்க அனுபவத்தோட தயாரா இருக்காங்க.
வேலையை மற்றவர்களுக்கு கொடுங்க.
வெற்றியை தன தாக்கி கொள்ளுங்கள்.
Hindusthan Samachar / Durai.J