அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடக்கம்
சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச) 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வகையில் தேர்தல் பணிகள் குறித்து இன்று (டிசம்பர் 31) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடக்கம்


சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச)

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வகையில் தேர்தல் பணிகள் குறித்து இன்று (டிசம்பர் 31) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடியுள்ளது. குறிப்பாக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக இடையே பேச்சுவார்த்தை முதற்கட்டமாக நிறைவடைந்த நிலையில் இத்தகைய பேச்சுவார்த்தை குறித்து இன்றைய தினம் மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கக்கூடிய தொகுதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளை பாஜக கேட்பதாகவும், அந்த தொகுதிகளில் பாஜகவை ஒதுக்கலாமா என்பது குறித்தான கருத்துக்களையும் இன்றைய தினம் அதிமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் அதிமுக வெற்றிவாய்ப்புகள் உள்ள தொகுதிகளை பாஜக ஒதுக்கீடு செய்வதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்தும் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாட உள்ளார்.

அதிமுக சார்பில் 1 வேட்புமனு விநியோகம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Hindusthan Samachar / vidya.b