பாஜகவின் வெறுப்பு,வன்முறை அரசியலுக்கு எங்கள் தமிழ்நாட்டு மக்கள் பலியாக மாட்டார்கள் - ஜோதிமணி
சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச) திருப்பரங்குன்றம் மலையில் தீப் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிலடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள
Jothimani


Tw


சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச)

திருப்பரங்குன்றம் மலையில் தீப் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிலடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டு காலமாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. நில அளவைக்காக நிறுத்தப்பட்டிருக்கும் எல்லைக் கல்லில் எல்லாம் தீபம் ஏற்றுகிற பழக்கம் எங்களுக்கு இல்லை.

உங்கள் வெறுப்பு,வன்முறை அரசியலுக்கு எங்கள் தமிழ்நாட்டு மக்கள் பலியாக மாட்டார்கள். எங்களுக்கு கல்வியும்,வளர்ச்சியுமே முக்கியம். முதலில் எங்களுக்கு உரிமையுள்ள கல்வி நிதியை விடுவியுங்கள்.

எங்கள் பிள்ளைகளின் கல்வியில் உங்கள் அரசியலைத் திணிக்க வேண்டாம்.

அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜோதிமணி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ