Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 31 டிசம்பர் (ஹி.ச.)
மத்திய அரசின் அயல் பணியில் உள்ள ரம்யா பாரதி, பொன்னி ஆகியோர் ஐ ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தீபா கனிகர், ஒம் பிரகாஷ் மீனா, ஜார்ஜி ஜார்ஜ், கலைச்செல்வன்,
அருண்சக்திகுமார், அரவிந்த் மேனன் ஆகியோர் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அயல்பணியில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வரும் சோனல் சந்த்ரா மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஐ ஜியாக பதவி உயர்வு பெற்று பணியிடமாற்றம்..
ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவி எஸ்.பி.யாக இருந்த சசாங்க் சாய் டி ஐ ஜி யாக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டி ஐ ஜி ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் உதவி ஐஜியாக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று ராமநாதபுர சரக டி ஐ ஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்..
தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாவது பட்டாலியன் எஸ் பியாக இருந்த மணிவண்ணன், டி ஐ ஜி யாக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு அருள் அரசு, டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சரக டிஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .
ஆவடி காவல் ஆணையரக தலைமையக நிர்வாக பிரிவு துணை ஆணையாரக இருந்த மகேஷ்வரன் டி ஐ ஜி ஆக பதவி உயர்வு பெற்று, சென்னை காவல் ஆணையரக தலைமை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எஸ்பி சரவணன், டி ஐ ஜி பதவி உயர்வு பெற்று நெல்லை சரக டி ஐ ஜி யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை எஸ் பி யாக இருந்த சாமிநாதன்,டி ஐ ஜி பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டி ஐ ஜியாக பணியிடமாற்றம்..
மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி ஜெயலட்சுமி ,டி ஐ ஜி பதவி உயர்வு பெற்று தாம்பரம் இணை ஆணையராக பணியிடமாற்றம்..
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி சிவக்குமார் ,டி ஐ ஜி பதவி உயர்வு பெற்று ,ஆவடி காவல் இணை ஆணையராக பணியிடமாற்றம்..
சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல்,சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்..
ராமநாதபுரம் சரக டி ஐ ஜி மூர்த்தி,காவல்துறை அமலாக்க பணியகத்தின் டி ஐ ஜி ஆக பணியிட மாற்றம்..
காஞ்சிபுரம் டி ஐ ஜி தேவராணி ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பு டி ஐ ஜி ஆக இடமாற்றம்..
விழுப்புரம் சரக டி ஐ ஜி உமா, சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராக பணியிடமாற்றம்..
நெல்லை காவல் ஆணையர் சந்தோஷ் ஹிதிமானி ,சேலம் சரக டி ஐ ஜி ஆக இடமாற்றம்..
காவல்துறை அமலாக்க பணியகத்தின் ஐ ஜி கபில் குமார் சரத்கர்,தாம்பரம் காவல் ஆணையரக போக்குவரத்து மற்றும் தலைமையக கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம்..
சென்னை காவல்துறை தெற்குமண்டல கூடுதல் ஆணையர் கண்ணன்,கோவை காவல் ஆணையரக காவல் ஆணையராக பணியிடமாற்றம்..
தமிழ்நாடு போலிஸ் அகாடெமி ஐ ஜி தேன்மொழி,காவல்துறை விரிவாக்க ஐ ஜி ஆக பணியிட மாற்றம்..
மத்திய மண்டல ஐ ஜி ஜோஷி நிர்மல்குமார், சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம்..
காவல்துறை நிர்வாக பிரிவு ஐஜி பாலகிருஷ்ணன் ,மத்திய மண்டல ஐ ஜி ஆக பணியிடமாற்றம்..
தாம்பரம் போக்குவரத்து மற்றும் தலைமையக கூடுதல் ஆணையர் மகேஷ்வரி,காவல்துறை நிர்வாக ஐ ஜி ஆக பணியிடமாற்றம்..
சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையர் விஜேயேந்திர பிடாரி, தென் மண்டல ஐ ஜி ஆக பணியிட மாற்றம்..
காவல்துறை விரிவாக்க ஐ ஜி நரேந்த்ர நாயர் ,சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம்.
கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் ,மேற்கு மண்டல ஐ ஜி ஆக பணியிட மாற்றம்.
பெரம்பலூர் எஸ்.பி ஆதர்ஷ் பச்சோரி சைபர் க்ரைம் எஸ் பி ஆக பணியிடமாற்றம்.
விழுப்புரம் மாவட்ட எஸ் பியாக சாய் ப்ரணீத்,மாநில பொருளாதார குற்றப்பிரிவு எஸ் பியாக செல்வகுமார்,ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக செந்தில்குமார்,தமிழ்நாடு போலிஸ் அகாடெமி நிர்வாக எஸ் பியாக உமையாள்,திருச்சி நகர வடக்கு துணை ஆணையராக செந்தில்குமார் உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையராக கீதா,அடையார் காவல் துணை ணையராக கார்த்திகேயன்,பள்ளிக்கரணை துணை ஆணையராக பொன் கார்த்திக் குமார் பணியிட மாற்றம்
இதே போல ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த மதன்,மதிவானன் எஸ்.பிக்களாக பதவி உயர்வு.
மொத்தமாக 70 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இரவோடு இரவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு சில மாதங்களில் வெளியாக இருக்க கூடிய சூழ்நிலையில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam