Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 டிசம்பர் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வரக்கூடிய வேளையிலே இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது குடும்பத்தினரோடு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில் சார்பாக அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து தரிசனத்திற்கு பிறகு அம்மன் சன்னதி அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;
காசி தமிழ் சங்கத்தை 4.0 வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கின்றோம் பாரதப் பிரதமர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி கலை பண்பாடு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலே இந்த காசி தமிழ் சங்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் புகழ்வாய்ந்த ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்தேன் அதன்
பிறகு இன்று அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம் செய்தது மகிழ்ச்சி.
கலை பண்பாடு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலே நம்முடைய பாரதப் பிரதமரின் செயல்பாடு இருந்து வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி கல்வி முறையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தமிழ் தான் இருக்க வேண்டும் அதுதான் தேசிய கல்விக் கொள்கையின் படி இருக்கிறது.
ஆளும் தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
மாணவர்களுடைய கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் நல்ல ஒரு உயர் பதவியோ அல்லது அதிகாரியாகவும் அவர்கள் வருவார்கள்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான கேள்விக்கு ??
நீதியரசர்திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றலாம் என்று கூறிய தீர்ப்புக்கு அனுமதி மறுத்து அரசியல் ரீதியாக இதை தமிழக அரசு கையாளுவது
கண்டிக்கத்தக்கது.
மதத்தின் மீதும் இந்துக்களுடைய புனிதமாக கருதக் கூடிய திருப்பரங்குன்றம் மலை
மீது விளக்கு ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள்.
சிவபெருமான் அவர்களுக்கு பாடம் புகட்டுவார். மேலும் தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ அதுபோலத்தான் இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கக் கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை இவர்களால் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam