Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 டிசம்பர் (ஹி.ச.)
பண்டிகை காலங்களில் மலர்கள் விற்பனை அதிகரிப்பதும் அதன்காரணமாக விலையேற்றம் ஏற்படுவதும் வாடிக்கையான நிகழ்வு.
அந்த வகையில் நாளை புத்தாண்டு மற்றும் மல்லிகை விளைச்சல், வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மதுரை மலர் சந்தையில் மல்லிகை விலை உயர்ந்துள்ளது.
மதுரை மலர் சந்தையில் இருந்து தான் தென்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூ வியாபாரிகள் பூக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள்.பனிப்பொழிவு அதிகமாக இருப்பதன் காரணமாக மல்லிகை விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து என்பது வெகுவாக குறைந்திருக்கிறது.
அந்த வகையில் நேற்று வரை ரூ.1,800 விற்கப்பட்ட மதுரை மல்லிகை பூ கிட்டத்தட்ட ரூ. 2,500 முதல் ரூ. 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சந்தையில் மல்லிகை விலை கிலோ ரூ.3,000 உயர்ந்திருக்கிறது.
ஆண்டிபட்டி சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ நேரடியாகவே ரூ. 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் மாற்ற பூக்களின் விலையும் ரூ . 50 முதல் ரூ. 200வரை அதிகரித்திருக்கிறது.
கனகமரம் ரூ. 2500க்கும், பிச்சிப்பூ ரூ.1300க்கும், முல்லை பூ ரூ. 1200க்கும், செவ்வந்தி ரூ.120க்கும், ரோஸ் வகைகள் ரூ. 200க்கும் விலை உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்களின் விளைச்சல் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b