சரக்கு வாகனம் கவிழந்து விபத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் முட்டைகள் சேதம்
விழுப்புரம், 31 டிசம்பர் (ஹி.ச.) விழுப்புரம் அருகே உள்ள கெடார் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் நாமக்கல்லிருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கி வந்து விழுப்புரத்தில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கு
Egg Vehicle


விழுப்புரம், 31 டிசம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் அருகே உள்ள கெடார் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் நாமக்கல்லிருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கி வந்து விழுப்புரத்தில் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் குணசேகரன் தனது சரக்கு வாகனத்தில் முட்டைகளை ஏற்றிக் கொண்டு கெடாரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விழுப்புரம் அருகே உள்ள அயினாம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென கவிழந்து விபத்துக்குள்ளானது.

இதில் சரக்கு வாகனத்தில் இருந்த முட்டைகள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 ஆயிரம் முட்டைகள் சாலையில் விழுந்து உடைந்தது.

இதனால் விழுப்புரம் - செஞ்சி இடையிலான நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN