Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள். போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போதும் கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் இப்போது தேர்தலுக்காக அங்கு சென்று உள்ளார்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் செவிலியர்கள் என ஹலோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகமே போர்க்களமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் குரலெல்லாம் தமிழக அரசுக்கு கேட்கவில்லை.
செவிலியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத முதலமைச்சர் ஸ்டாலின், தினந்தோறும் போட்டோ ஷூட் மட்டும் நடத்தி வருகிறார் . தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆட்சி புதிய ஆண்டில் முடிவுக்கு வரும். மீண்டும் எம்ஜிஆர் ,ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்.
தமிழ்நாடே தலைகுனின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மது போதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்
இது போன்ற சம்பவம் நடந்திருப்பதுஅரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ