கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பங்கேற்க வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று டாக்கா பயணம்!
புதுடெல்லி, 31 டிசம்பர் (ஹி.ச.) இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம்
இன்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பங்கேற்க டாக்கா பயணம்


புதுடெல்லி, 31 டிசம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 80. கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் ஆவார்.

கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கள் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

இதற்காக ஜெய்சங்கர் இன்று வங்காளதேச தலைநகர் டாக்கா செல்கிறார்.

Hindusthan Samachar / JANAKI RAM