Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் திருப்பதி நகரில் தமிழ்ச்செல்வி என்பவர் அக்குபஞ்சர் மட்டும் படித்து முடித்துவிட்டு அலோபதி மருத்துவம் செய்து வருகிறார் .
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் அலோபதி மருத்துவ மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்து வந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று மதுரை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் செல்வராஜ் தலைமையில் திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் நரேந்திரன் அடங்கிய மருத்துவ குழுவினர் விசாரணை செய்தனர்.
அதில் அவரது வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
அக்கு பஞ்சர் படித்து முடித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்ச்செல்வி மீது அரசு திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் நரேந்திரன் மருந்துகள் மற்றும் ஊசிகளை கைப்பற்றி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam