Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச)
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் பொய்யாய் பேசிக் கொண்டு சுற்றுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
சென்னை கந்தன்சாவடியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை மாநகராட்சி 14வது மண்டல குழு தலைவரும், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில் :
எடப்பாடி பழனிச்சாமி எங்கே சென்றாலும் பொய்யாய் பேசிக் கொண்டு வருகிறார். இந்த பகுதியில் நேற்றைய முன்திரம் சொன்ன பொய் கொஞ்சம் நஞ்சமல்ல, பொய் மூட்டையை அவிழ்த்து கொட்ட கொட்ட இங்க இருந்தா கூட்டம் மொத்தமாக காலி ஆகிவிட்டது.
அதிமுக ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்காக ஆதரவாக ஒரு சிறிய அளவில் சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சியில் அதை ஈசிஆரில் இருந்து ஓஎம்ஆர் இணைக்க கூடிய ஒரு சாலை ரூபாய் 204 கோடியில் மேம்பாலம் அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி சோழிங்கநல்லூர் தொகுதியில் பேசுவதற்கு தார்மீக உரிமையே இல்லை மாசு காட்டம். முதல்வரை குறை சொல்ல எடப்பாடிக்கு தகுதி இல்லை.
விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்பெறும் வகையில் இதுவரை 699 லட்சத்து 50 ஆயிரம் பயணங்கள் மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல் திருநங்கைகள் திருநம்பிகள் 47 கோடி 21 லட்சம் பயணங்கள் திருநங்கைகள் சமூகம் பயன்பெற்றுள்ளனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam