Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வணிக நாளில் (டிசம்பர் 31) 'இடையூறுகள் இல்லாத நாள்' கடைபிடிக்கப்படுகிறது.
ஆண்டின் இறுதியில் முடிக்கப்படாமல் இருக்கும் வேலைகளை எவ்வித இடையூறுமின்றி முழு கவனத்துடன் செய்து முடிக்க இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நாளின் முக்கியத்துவம்:
நவீன உலகில் போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைதள அறிவிப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் நமது
கவனத்தை அடிக்கடி திசைதிருப்புகின்றன. இதனால் ஒரு வேலையை முழுமையாக முடிக்க அதிக நேரம் எடுப்பதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த நாள் இந்த கவனச்சிதறல்களைத் தவிர்த்து, உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது.
இடையூறுகள் இன்றி செயல்பட சில வழிகள்:
அறிவிப்புகளை அணைக்கவும் - செல்போன் மற்றும் கணினியில் வரும் தேவையற்ற நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைக்கவும்.
தனிமையை நாடுங்கள் - வேலை செய்யும் போது கதவை மூடி வைக்கலாம் அல்லது 'தொந்தரவு செய்ய வேண்டாம்' என்ற பலகையை வைக்கலாம்.
மின்னஞ்சல்களைத் தவிர்க்கவும் - அவசரமில்லாத மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதைத் தள்ளிப்போடலாம்.
முன்னுரிமை அளித்தல் - மிக முக்கியமான வேலைகளைப் பட்டியலிட்டு, அவற்றை முதலில் முடிக்க கவனம் செலுத்தலாம்.
ஆண்டின் இறுதி நாட்களில் நிலுவையில் உள்ள பணிகளை நிம்மதியாக முடித்து, புதிய ஆண்டை புத்துணர்ச்சியுடன் தொடங்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
Hindusthan Samachar / JANAKI RAM